உன்னை நான் கொஞ்சி அழைத்தேன்
கெஞ்சி அழைத்தேன்
நீ வரவில்லை
உன்னை நான் பாடி அழைத்தேன்
ஆடி அழைத்தேன்
நீ வரவில்லை
நீ வரமாட்டாய் என்று
என் நம்பிக்கையை இழந்தேன்
என் ஆசைகளை அழித்தேன்
அப்பொழுது நீ வந்தாய்
நீ வந்தாய்
ஒரு முத்தம் தந்தாய்
ஒரு வார்த்தையும் பேசாமல்
சென்று விட்டாய்
மீண்டும் ஆடினேன் பாடினேன்
வா வா என்று கதறினேன்
நீ வரவில்லை
மீண்டும் மனதை ஆற்றினேன்
கனவை கலைத்தேன்
மீண்டும் நீ வந்தாய் முத்தம் தந்தாய்
உன் மணத்தால் மயக்கினாய்
ஒரு வார்த்தையும் பேசாமல்
சென்று விட்டாய்
நீ ஏமாற்றுவாய் என்று
என் பாட்டுகளை அழித்தேன்
என் கவிதைகளை எரித்தேன்
ஒரு புதிய தோட்டம் படைத்தேன்
புது மலர்கள் வளர்த்தேன்
புது கனவுமரம் உண்டாக்கினேன்
உன்னை மறந்தேன்
உன் நினைவுகளை புதைத்தேன்
அப்பொழுது நீ வந்தாய்
மின்னலாக வந்தாய் இடியாக வந்தாய்
புயலாக வந்து என் உலகத்தை அழித்தாய்
மீண்டும் ஒரு வார்த்தையும் பேசாமல்
சென்று விட்டாய்
கெஞ்சி அழைத்தேன்
நீ வரவில்லை
உன்னை நான் பாடி அழைத்தேன்
ஆடி அழைத்தேன்
நீ வரவில்லை
நீ வரமாட்டாய் என்று
என் நம்பிக்கையை இழந்தேன்
என் ஆசைகளை அழித்தேன்
அப்பொழுது நீ வந்தாய்
நீ வந்தாய்
ஒரு முத்தம் தந்தாய்
ஒரு வார்த்தையும் பேசாமல்
சென்று விட்டாய்
மீண்டும் ஆடினேன் பாடினேன்
வா வா என்று கதறினேன்
நீ வரவில்லை
மீண்டும் மனதை ஆற்றினேன்
கனவை கலைத்தேன்
மீண்டும் நீ வந்தாய் முத்தம் தந்தாய்
உன் மணத்தால் மயக்கினாய்
ஒரு வார்த்தையும் பேசாமல்
சென்று விட்டாய்
நீ ஏமாற்றுவாய் என்று
என் பாட்டுகளை அழித்தேன்
என் கவிதைகளை எரித்தேன்
ஒரு புதிய தோட்டம் படைத்தேன்
புது மலர்கள் வளர்த்தேன்
புது கனவுமரம் உண்டாக்கினேன்
உன்னை மறந்தேன்
உன் நினைவுகளை புதைத்தேன்
அப்பொழுது நீ வந்தாய்
மின்னலாக வந்தாய் இடியாக வந்தாய்
புயலாக வந்து என் உலகத்தை அழித்தாய்
மீண்டும் ஒரு வார்த்தையும் பேசாமல்
சென்று விட்டாய்
Comments