நீ வருவாய், நீ வருவாய், உன்னை நினைத்து ஏங்கும் கண்கள்
கடற்க்கரை நாடும் அலைகளைப்போல் உன்னைத் தேடும் கண்கள்
மணத்தில் மயங்கி, மலரைத் தேடிக்கொண்டு இங்கும் அங்கும்
அலையும் ஒவ்வொருப் பட்டாம்பூச்சிப்போல் உன்னைத் தேடும் கண்கள்
மலை இறங்கி, நிலம் தாண்டீ, கரை எங்கே கரை எங்கே
கடலைத் தேடீக்கொண்டு ஓடும் ஆறுபோல் உன்னைத் தேடும் கண்கள்
கடலிருந்து காற்றை வழி கேட்டு, வானை வழி கேட்டு,
புவியைத் தேடி வரும் கார்முகில்போல் உன்னைத் தேடும் கண்கள்
ஆயிரம் ஆண்டு ஒரே வேட்கையில் தன்னை எரித்துக்கொண்டு
ஆதவனைச் சுற்றி வரும் வால்மீன்போல், உன்னைத் தேடும் கண்கள்
உன்னை புகழ சொல் இல்லாமல் இருக்கிறான் 'வழிப்போக்கன்',
கண்ணனை நாடி பாடிய மீராப்போல், உன்னைத் தேடும் கண்கள்

Comments